சென்னையில் நடந்த ஐபிஎல் போராட்டத்தின் போது, போலீஸாரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர். அப்போது, போலீஸ் ஒருவர் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரால் சரமாரியாகத் தாக்கப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரை போலீஸார் தேடி வந்தனர்.
---------------------------------------------------------
நாடு முழுவதும் தொடர்ந்து 2வது நாளாக பெட்ரோல் விலை குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமையான இன்று, அதிகபட்சமாக, மும்பையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 பைசாக்கள் குறைந்து காணப்பட்டது. சென்னையை பொறுத்தளவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 15 பைசா குறைந்துள்ளது. டெல்லியில் 14 பைசாக்களும், கொல்கத்தாவில் 13 பைசாக்களுமாக விலை குறைந்துள்ளது. அதே நேரம், டீசல் விலையில் மாற்றம் இல்லை.